கவி மழை

ஒரு முறை காளமேகப் புலவர் திருமலைராயன் என்ற மன்னன் ஆண்டுவந்த திருமலைராயன் பட்டணம் என்ற நாட்டுக்குச்சென்றார். அரச சபைக்கு வந்த அவரை யாரும் வரவேற்கவில்லை. இருக்க ஆசனமும் தரவில்லை. இந்த அவமானத்தைப் போக்க காளமேகம் கலைவாணியை மனதில் தியானித்து

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்


எனும் வெண்பாவைப் பாடவும், அன்னை கலைவாணியின் அருளா அரசனது சிம்மாசனம் வளர்ந்து இடம் கொடுக்கவே, அவ்வாசனத்தில் அரசனுக்குச் சரிசமமாக அமர்ந்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாரானார்.

அரசன் அவரை யாரென்று விசாரிக்கவே, அவர் தான் "காளமேகம்" என்று பதிலுரைத்தார். அங்கு ஆஸ்தான கவியாக இருந்த அதிமதுரகவி என்பவர் அப்பொழுது காளமேகத்தைப் பார்த்து இகழ்க்சியுடன், "மேகமென்றால் பொழிய வேண்டுமே?" என்று கேட்க அதற்குக் காளமேகம் "பொழியத்தான் வந்தது"என்று பதிலிறுத்தார். அதற்கு "எப்படி?" என்று மீண்டும் அதிமதுரகவி வினவவே,

"உலகைச்சூழ்ந்துள்ள கடல் நீரில் உப்பு மிகுந்திருப்பதால், தொல்காப்பியர் எழுடதிய நன்னூல் சூத்திரரமெனும் இலக்கண நூலாகிய கடலில் மொண்டு, அகத்தியன் தமிழ்படைத்த பொதிகை மலைமேல் நின்று, வானளாவிய கவிதைகளை உரைக்கின்ற புலவர்களின் மனதில் இடியென இடித்தது, மின்னலென முழங்கி, கவிமழை பொழியக் காளமேகம் புறப்பட்டது" எனும் பொருள்படட,

கழியுந் திரைகட லுப்பென்று நன்னூற் கடலின் மொண்டு
வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வான்கவிதை
மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப்
பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே


எனும் பாடலைக் கூறினார்.

Labels:

1 Comments:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அண்ணா!
பனி பூண்டா?- பணிபூண்டா?
வெள்ளைக் கமலத்து - வெள்ளைக் கமலத்தே
சரியாசனத்து - சரியாசனம்

இப்படித்தான் படித்ததாக ஞாபகம்; மூலமிருந்தால் பார்க்கவும். நானும் தவறாகக் கற்றிருக்க்லாம்.

2:39 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home